Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரயில்வே நிலங்களில் சரக்கு கையாளும் மையங்கள் - அழைப்பு விடுக்கும் ரயில்வே!

ரயில்வே நிலங்களில் சரக்கு கையாளும் மையங்கள் - அழைப்பு விடுக்கும் ரயில்வே!
ரயில்வே நிலங்களில் சரக்கு கையாளும் மையங்கள்

மேலும் விவரங்கள் அறிய, முதுநிலை வணிக மேலாளரின் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

பகிரவும் WhatsApp Facebook

சென்னை:

சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட ரயில்வே நிலங்களில் சரக்கு கையாளும் மையங்கள் அமைக்க ஆர்வமுள்ள நிறுவனங்களுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுத்துள்ளது.

சென்னை கோட்டம் வடக்கே கூடூர் வரையிலும், மேற்கே ஜோலார்பேட்டை வரையிலும், தெற்கே முண்டியம்பாக்கம் வரையிலும் பரவியுள்ளது. மும்பை வழித்தடத்தில் முன்பு அரக்கோணம் முதல் ரேணிகுண்டா வரை இருந்த சென்னைக் கோட்டத்தின் எல்லை இப்போது பூடி ரயில்நிலையம் வரை சுருங்கி உள்ளது. இந்த வழித்தடங்களில் மொத்தம் 157 ரயில்நிலையங்கள் உள்ளன. இதில் பல ரயில்நிலையங்களின் அருகே ஏக்கர் கணக்கில் இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களால் வருவாயை பெருக்க சென்னை கோட்டம் முடிவு செய்துள்ளது.

தங்களுக்கு வசதியான ரயில்நிலையம் அருகில் சரக்குகளை கையாளும் மையங்கள், சரக்கு போக்குவரத்து முனையங்கள், குளிர்பதன கிடங்குகள், சேமிப்புக்கலன்கள் அமைக்க ஆர்வமுள்ளவர்கள் ரயில்வேயை அணுகலாம். கூடவே தாங்கள் தேர்வு செய்ய விரும்பும் ரயில்நிலையம், தேவைப்படும் நிலத்தின் அளவு, ஒவ்வொரு ஆண்டும் கையாள உள்ள சரக்குகள் விவரம், எந்த மாதிரியான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க உள்ளீர்கள் என்பது போன்ற முழு விவரங்களுடன் சென்னைக் கோட்ட முதுநிலை வணிக மேலாளருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய, முதுநிலை வணிக மேலாளரின் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.
முந்தைய செய்தி
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு
அடுத்த செய்தி
பெண்களுக்கான சிறந்த 10 பணியிடங்கள் - உங்க ஆஃபிஸ் லிஸ்ட்டில் இருக்கா?

தொடர்புடைய செய்திகள்